13 Oct உங்கள் சொந்த டொமைனுடன் கூடிய வணிக மின்னஞ்சல்: வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற உதவும் சிறிய மேம்பாடு

கட்டணமொன்றைச் செலுத்தக் கோரி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருவதாகக் கற்பனை செய்து பாருங்கள். ஒன்று nimal.perera1985@freemail.xyy. போன்ற இலவச மின்னஞ்சல் முகவரியிலிருந்து. மற்றொன்று order@foodmart.lk. போன்ற வணிக மின்னஞ்சல் முகவரியிலிருந்து. அந்த மின்னஞ்சல்களில் ஒரு வார்த்தையைக் கூட வாசிப்பதற்கு முன்பே, இதில் எந்த வணிகம் நிலையானது, தொழில்முறையானது மற்றும் நம்பகமானது என்ற ஒரு எண்ணம் மின்னஞ்சல் முகவரியை வைத்தே உங்களுக்குள் உருவாகிவிடுகிறது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான வணிகங்கள் எதிர்கொள்ளும் உண்மை இதுவே. நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெயர்ப்பலகைகள், கடை முன்புறங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் முதலீடு செய்தாலும், பலர் இன்னும் தங்கள் முக்கியமான வணிகத் தொடர்புகளை சொந்த டொமைனிலுள்ள வணிக மின்னஞ்சலுக்குப் பதிலாக இலவச மின்னஞ்சல் கணக்குகள் மூலமே மேற்கொள்கிறார்கள். இதனால், தங்களுக்குத் தெரியாமலேயே போட்டியாளர்களுக்கு நம்பகத்தன்மையில் முன்னிலை அளிக்கிறார்கள். உங்கள் சொந்த .lk டொமைனுடன் கூடிய தொழில்முறை மின்னஞ்சல் இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலவச மின்னஞ்சல் vs வணிக மின்னஞ்சல்: இலவச முகவரியின் மறைந்திருக்கும் செலவு
ஒரு இலவச மின்னஞ்சல் முகவரியை உருவாக்க எந்தச் செலவும் இல்லை; உண்மையில் அதுவே பிரச்சினையுமாகும். யாரும் சில நிமிடங்களில் அத்தகைய ஒரு முகவரியை உருவாக்க முடியும். இதனால் வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள் மற்றும் வங்கிகள் அவற்றை எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர். உங்கள் விலைப்பட்டியல், முன்மொழிவு அல்லது கட்டண அறிவுறுத்தல் ஒரு பொதுவான மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்தால், அது உண்மையில் உங்கள் வணிகத்திலிருந்துதான் வந்ததா என்பதைப் பெறுநர் எளிதாக உறுதிப்படுத்த முடியாது.
அந்தத் தயக்கம் உங்கள் வணிகத்திற்கு உண்மையான இழப்பை ஏற்படுத்தலாம். பதில் கிடைக்காத விலைமதிப்பீடுகள், அதிக நம்பகத்தன்மையுடன் தோன்றும் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள், தொடங்காமலேயே முடிவடையும் கூட்டாண்மைகள் ஆகியவை அதில் அடங்கும். நீங்கள் மிகச் சிறந்த வணிகத்தை நடத்தினாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரி ஒரு பொழுதுபோக்கு முயற்சிபோல் தோன்றினால், வாடிக்கையாளர்களின் மனதில் நிலைக்கும் எண்ணமும் அதுவாகவே இருக்கும்.
உங்கள் பிராண்டைக் கொண்ட வணிக மின்னஞ்சல் ஒரு நம்பிக்கையின் அடையாளம்
உங்கள் டொமைன் பெயரே உங்கள் டிஜிட்டல் அடையாளமாகும். உங்கள் மின்னஞ்சல் முகவரியும் அந்த அடையாளத்தை பிரதிபலிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் sales@yourbusiness.lk, போன்ற முகவரியைப் பார்க்கும்போது, தனது சொந்தப் பெயரில் முதலீடு செய்துள்ள, வெளிப்படையாகச் செயல்படும் மற்றும் நீண்டகாலம் இயங்கத் திட்டமிட்டுள்ள ஒரு நிறுவனத்தை அவர்கள் காண்கிறார்கள். உங்கள் கடை முன்புறத்திற்கு ஒரு பெயர்ப்பலகை செய்யும் பணியைப் போலவே, மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சலுக்கும் செய்கிறது: அவர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த நம்பிக்கை பல வழிகளில் பயன் அளிக்கிறது:
- வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதிலும் பணம் செலுத்துவதிலும் அதிக பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
- தொழில்முறையாகத் தங்களை வெளிப்படுத்தும் வணிகங்களுக்கு வழங்குநர்கள் சிறந்த நிபந்தனைகளை வழங்க முன்வருகிறார்கள்.
- நிறுவனத்தின் பெயரைக் கொண்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து தொடர்பு கொள்வதில் ஊழியர்களும் அதிக பெருமை உணர்கிறார்கள்.
சிறந்த மின்னஞ்சல் சென்றடையும் திறன், Spam-இல் தொலைந்து போகும் செய்திகள் குறைவு
தொழில்முறை தோற்றம் மட்டுமே இதன் நன்மை அல்ல. இலவசமான பொதுவான மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் Spam எனக் குறிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில் Spam அனுப்புபவர்களும் பெருமளவில் இதே இலவச தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். சரியான அங்கீகார வசதிகளுடன் உங்கள் சொந்த டொமைனில் பயன்படுத்தப்படும் வணிக மின்னஞ்சல், உங்கள் செய்திகள் உண்மையானவை என்பதை பெறுநரின் மின்னஞ்சல் சேவையகங்களுக்கு தெரிவித்து, மின்னஞ்சல் சென்றடையும் திறனை மேம்படுத்துகிறது.
இதன் விளைவு எளிமையானதுதான், ஆனால் மிகவும் முக்கியமானது: உங்கள் விலைமதிப்பீடுகள், விலைப்பட்டியல்கள் மற்றும் தொடர்ச்சியான தொடர்பு மின்னஞ்சல்கள் Junk Folder-க்கு செல்லாமல், உண்மையில் Inbox-ஐச் சென்றடையும். ஒரு வணிகத்திற்கு, Spam Filter காரணமாக ஒரு முக்கியமான மின்னஞ்சல் தவறவிடப்படுவது, ஒரு வருட தொழில்முறை மின்னஞ்சல் Hosting செலவைவிட அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இலவச மின்னஞ்சல் vs தொழில்முறை மின்னஞ்சல்
எளிதான மின்னஞ்சல் அமைப்பு
பிராண்டைக் கொண்ட ஒரு மின்னஞ்சலை அமைப்பதற்கு Servers, தொழில்நுட்ப ஊழியர்கள் அல்லது சிக்கலான Hosting ஏற்பாடுகள் தேவைப்படும் என்று பல வணிக உரிமையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அவசியமில்லை. உங்கள் .lk டொமைன் பெயருடன் இணைந்த தொழில்முறை மின்னஞ்சலை எந்தத் தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் பயன்படுத்தத் தொடங்கலாம். நிறுவ வேண்டிய மென்பொருளோ பராமரிக்க வேண்டிய அமைப்போ இல்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தேர்வு செய்து, மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கினால் போதும்.
உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சலைப் போலவே, உங்கள் வணிக மின்னஞ்சலும் தொலைபேசி, Tablet அல்லது Desktop என எந்தச் சாதனத்திலும் இயங்கும். எனவே கடையிலிருந்தோ, பணித்தள அலுவலகத்திலிருந்தோ அல்லது பயணத்தின் போதோ வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியும்.
இலங்கையின் ஒவ்வொரு வணிகத்திற்காகவும் உருவாக்கப்பட்டது: சுயதொழிலாளர்கள் முதல் வணிக உரிமையாளர்கள் வரை
இங்குதான் myMail.lk உதவுகிறது. myMail.lk என்பது LK Domain Registry வழங்கும் வணிக மின்னஞ்சல் சேவையாகும். Mail Server ஒன்றை தனியாக இயக்குவதற்கான செலவோ சிக்கலோ இல்லாமல், இலங்கையின் ஒவ்வொரு வணிகத்திற்கும் அதன் சொந்த .lk டொமைன் பெயரில் தொழில்முறை மின்னஞ்சலை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தனிப்பட்ட பிராண்டை உருவாக்கும் சுயதொழிலாளராக இருந்தாலும் அல்லது முதல் முறையாக நிறுவன வாடிக்கையாளர்களைப் பெற்றுவரும் சிறு மற்றும் நடுத்தர வணிகமாக இருந்தாலும், myMail.lk உங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும். hello@yourbusiness.lk போன்ற ஒரு தனிப்பயன் மின்னஞ்சல் முகவரியுடன் தொடங்கி, உங்கள் குழு வளரும்போது Sales, Support மற்றும் Accounts ஆகியவற்றுக்கான தனித்தனி Mailbox-களைச் சேர்க்கலாம். அவை அனைத்தும் ஒரே டொமைனின் கீழ் இயங்கி, ஒரே வணிக அடையாளத்தை வலுப்படுத்தும்.
மேலும் இது .lk டொமைன் பெயரின் அடிப்படையில் செயல்படுவதால், ஒரு பொதுவான மின்னஞ்சல் முகவரால் செய்ய முடியாத ஒன்றை உங்கள் முகவரி செய்கிறது: நீங்கள் இலங்கையைச் சேர்ந்த, எளிதாகக் கண்டறியக்கூடிய, சரிபார்க்கக்கூடிய மற்றும் நம்பக்கூடிய ஒரு வணிகம் என்பதை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரே பார்வையில் தெரிவிக்கிறது.
உங்கள் வணிகத்திற்கு அதன் சொந்தப் பெயர் இருக்க வேண்டும்
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலும் உங்கள் பிராண்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். தொழில்முறை மின்னஞ்சல் முகவரி என்பது ஒரு வணிகம் செய்யக்கூடிய மிகச் சிறிய முதலீடுகளில் ஒன்றாக இருந்தாலும், முதல் செய்தியிலிருந்தே ஒவ்வொரு வாடிக்கையாளரும், வழங்குநரும் மற்றும் கூட்டாளரும் உங்கள் வணிகத்தைப் பார்க்கும் விதத்தை அது மாற்றிவிடுகிறது. உங்கள் .lk டொமைன் பெயருடன் உங்கள் தனிப்பயன் வணிக மின்னஞ்சலை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள் →
இன்னும் டொமைன் இல்லையா?
முதலில் உங்கள் .lk டொமைனைப் பதிவு செய்யுங்கள்.